மிக உயரமான அஞ்சல் தலைகளை வெளியிட்டது சிங்கப்பூர் அஞ்சல் துறை!

Photo: Singapore Post

 

மிக உயரமான ஆறு அஞ்சல் தலைகளை சிங்கப்பூர் அஞ்சல் துறை (Singapore Post) நேற்று (01/07/2021) வெளியிட்டது. அதில் ஒவ்வொரு அஞ்சல் தலைகளும் சுமார் 81.6 மில்லிமீட்டர் உயரம் கொண்டவை. இது நாட்டின் வரலாற்றிலேயே மிக உயரமான அஞ்சல் தலை ஆகும்.

 

இது குறித்து சிங்கப்பூர் அஞ்சல் துறை கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்ட வான உயர்வு பசுமை (Celebrate Skyrise Greenery Projects) திட்டங்களைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை இயற்கையில் ஒரு நகரமாக வடிவமைப்பதில் புதிய சாத்தியங்களையும், எல்லைகளையும் ஊக்கப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளது.

 

சிங்கப்பூர் அஞ்சல் துறை வெளியிட்டுள்ள மிக உயரமான அஞ்சல் தலைகள் குறித்து பார்ப்போம்!

கூ டெக் புவாட் மருத்துவமனை (2010) Khoo Teck Puat Hospital (completed in 2010), ஓசியா ஹோட்டல் டவுன்டவுன் (2016) Oasia Hotel Downtown (2016), கம்புங் அட்மிரால்டி (2017) Kampung Admiralty (2017), ஜுவல் சாங்கி விமான நிலையம் (2018) Jewel Changi Airport (2018), ஸ்கைடெர்ரேஸ் @ டவ்சன் (2015) SkyTerrace@Dawson (2015), லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (2016) Lee Kong Chian Natural History Museum (2015) உள்ளிட்ட வானுயர்ந்த (Skyrise) கட்டடங்கள் பசுமை காட்சியுடன் இடம் பெற்றுள்ளன.

 

30 சென்ட்ஸ் மற்றும் 1.40 சிங்கப்பூர் டாலருக்கும் இடையில் மதிப்புள்ள அஞ்சல் தலைகள் அனைத்து அஞ்சல் நிலையங்கள், அஞ்சல் தலை கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கின்றன.

 

முன் கூட்டியே ரத்துச் செய்யப்பட்ட முதல் நாள் அஞ்சல் தலைகளுடன் கூடிய கவர்கள் 6.30 சிங்கப்பூர் டாலருக்கும் மற்றும் விளக்கக்காட்சி பொதிகள் (Presentation Packs) 7.35 டாலருக்கும் கிடைக்கின்றன.