வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு கைகொடுக்கும் Singtel – S$600 மதிப்புள்ள கட்டண சலுகை

வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு கைகொடுக்கும் Singtel - S$600 மதிப்புள்ள கட்டண சலுகை
Anthony Tran/Unsplash and Singtel

வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு S$600 மதிப்புள்ள கட்டண சலுகையை Singtel அறிவித்துள்ளது.

அதாவது சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தவாசிகளுக்கு (PR) மட்டும் இந்த தள்ளுபடி கிடைக்கும் என அது கூறியுள்ளது.

இந்திய ஊழியர்களை ஈர்த்த “சிங்கப்பூர் வேலை விளம்பரம்” – வேலைக்கு வழங்கப்பட்ட சிறப்புகளை கண்டு வாயடைத்து போன ஊழியர்கள்

Singtel, Etiqa உடன் இணைந்து நிதி நெருக்கடியில் இருக்கும் வாடிக்கையாளருக்கு உதவும் நோக்கில் இலவச தனிப்பட்ட விபத்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், Singtel Bill Protect மூலம் தாங்கள் கடைசியாக செலுத்திய தகுதியான Singtel கட்டணத்தில் ஆறு மடங்கு வரை சலுகை பெறலாம்.

ஆறு சமமான மாதத் தவணைகளுடன், S$600 வரை கட்டண வரம்பு வழங்கப்படும்.

இந்த தள்ளுபடி எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையாவிட்டாலும், குறைந்தபட்சம் சில நிதிச்சுமைகளை போக்கவும், புதிய வேலையைத் தேடுவதற்கும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தற்செயலான மரணம் ஏற்பட்டால், கடைசியாக செலுத்திய உங்கள் சிங்டெல் கட்டணத்தில் 12 மடங்கு தொகை அதாவது S$1,200 வரை சலுகை வழங்கப்படும்.

தகுதி:

Singtel போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

நீங்கள் சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூரில் வசிக்கும் நிரந்தரக் வாசியாக இருக்க வேண்டும்.

உங்கள் அடுத்த பிறந்தநாள் வயது வரம்பு 17 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை