பணம் அனுப்பும் சேவையில், பல்வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்ப சிங்டெல் புதுத் திட்டம்!

Photo: Singtel

சிங்டெல் நிறுவனத்தின் டாஷ் (Dash) தளம் மற்றும் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனமும் ஒன்றிணைந்து, டாஷ் இணையதள சேவையைப் பயன்படுத்தி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவை தொடங்க புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த டாஷ் இணையதள சேவையைப் பயன்படுத்தி உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் கூடிய விரைவில் எளிய முறையில் பணம் அனுப்பும் சேவை தொடங்கப்படும் என்று சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 3,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சிங்டெல் நிறுவனத்தின் டாஷ் (Dash) மின்னியல் முறையைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் புதிய திட்டத்தில், முதன்முதலாக இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் வசதியை ஏற்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

சிங்டெல் டாஷ் மூலம் பணம் அனுப்பு சேவை தற்போது ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் இப்புதிய சேவை எப்போது முழுமையாக நடைமுறைக்கு வரும் என்பதை அந்நிறுவனம் தெளிவாக தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்டெல் டாஷ் சேவை கடைகள் மற்றும் இணையத்தில் அத்தியாவசிய கட்டணங்கள் செலுத்துவது பாேன்ற செயல்பாடுகளில் மட்டுமே உபயோகிக்க இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தியதாக இரண்டு பணிப்பெண்கள் கைது!