‘Sinovac’ கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது?- சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

File Photo

 

சிங்கப்பூர் நாடாளுமன்றம் நேற்று (05/07/2021) கூடியது. அப்போது, உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகைச் செய்யும் காவல்துறை படையின் Police Force (Amendment) Bill சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர், சிங்கப்பூரில் ‘Sinovac’ கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது? என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் (Health Minister Ong Ye Kung) எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சிங்கப்பூரில் தடுப்பூசி ஜூன் 18- ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. ஜூலை 3- ஆம் தேதி நிலவரப்படி, ‘Sinovac’ இரண்டு கொரோனா தடுப்பூசியில் 17,296 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு சாதாரண பக்கவிளைவுகள் ஏற்பட்டன. மருத்துவக் காரணங்களால் சிலரால் ‘mRNA’ வகை தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் போனது. அவர்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்; அதற்கான செலவுகளை அரசு ஏற்கும்” எனத் தெரிவித்தார்.