“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

Photo: Hindu Endowments Board Official website

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிவதாஸ்- இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி நிதியம் (Sivadas-HEB Education Fund), உயர்நிலைக் கல்வியைத் தொடரும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்து மாணவர்களின் கல்விச் செலவைச் சமாளிக்க கல்வி உதவித்தொகைக்கோ மற்றும் கல்வி மானியத்திற்கோ விண்ணப்பிக்குமாறு அழைக்கிறோம்.

விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிடும் சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனம்!

கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கும் தெரிவிக்க அனைத்து அரசாங்க கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்படும். உதவித்தொகைக்கு இன்று (ஏப்ரல் 19) முதல் மே 17- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Photo: Hindu Endowments Board Official Facebook Page

வேன்- கனரக வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://bit.ly/3kKW45w என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிக்கு ஹேமா- 65939209, ஜெயப்பிரகாசம்- 65939211 ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.