அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவரின் விருப்பம்

singapore shares fund to pandemic g20 summit europe world bank

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1937-ஆம் ஆண்டு குடிபெயர்ந்த சிவதாஸ்,ஆரம்பத்தில் ஆசிரியராக பணிபுரிந்து ,பின்னர் பத்திரிக்கையாளராக சேவையாற்றி கடைசியாக சிறந்த முதலீட்டாளராக வலம் வந்தார்.அவர் உயிரிழப்பதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளை வாரியத்திடம் ஒப்படைத்தார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை கல்வி நிதி வாரியம் தொடங்கப்பட்டது.கடந்த ஜூலை 2-ஆம் தேதி அறக்கட்டளையிலிருந்து உயர்கல்வி பயின்று வரும் 106 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட $165000 மதிப்பிலான ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.

இந்த அறக்கட்டளை சுமார் $4.6 மில்லியன் வரையிலான நிதியை ஏறத்தாழ 2,300 மாணவர்களுக்கு 2011 ஆண்டிலிருந்து 2021 வரை வழங்கியுள்ளது.புருஷோத்தமன் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதிச் செயற்குழுவின் தலைவராவார்.

தனியார்,பொது பல்கலைக்கழகங்கள் ,தொழிர்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகளின் வழி உதவ செயற்குழு முனைகிறது என்று அவர் கூறினார்.

இது போன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதால் மாணவர்கள் ஊக்கம் பெற்று கல்வியில் சிறந்து விளங்க முயற்சிப்பார்கள்.இதனால் குடும்பங்களில் அடுத்து வரும் தலைமுறையினரையும் இவர்கள் நன்கு கல்வி கற்க ஊக்குவிப்பர் என்று இந்து அறக்கட்டளை வாரிய செயற்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் நம்பிக்கை தெரிவித்தார்.