சிங்கப்பூர் பயணிகளுக்கு பரிசோதனை தளர்வுகளை அறிவித்த நாடு!

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், சிங்கப்பூர் மற்றும் உலகின் சில நாடுகள் VTL எனப்படும் பயணப் பாதை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான VTL திட்டத்தின் கீழ், மலேசியா செல்லும் பயணிகளுக்கான பரிசோதனை விதிமுறைகளை அந்நாடு தளர்த்தியுள்ளது.

பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற பதில்!

அதன்படி, தற்போது மலேசியா செல்பவர்கள் முதல் ஆறு நாள்கள் மூன்று முறை RTK-Ag என்னும் பரிசோதனையை செய்ய வேண்டும். ஆனால், இன்று (மார்ச் 02) முதல் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியதில்லை என மலேசிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே வேலையில், மலேசியா வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பும், மலேசியா வந்திறங்கியவுடனும் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், லங்காவி (Langkawi) அனைத்துலகச் சுற்றுலா பயணத் திட்டம், குறுகிய கால வர்த்தக வருகையாளர்களுக்கான One Stop Centre திட்டத்தின்கீழ் மலேசியா செல்பவர்களுக்கும் இந்த தளர்வு பொருந்தும்.

இந்திய சர்வதேச பயணிகள் விமான சேவை: இந்த மாதத்திலாவது தொடங்குமா? – எதிர்நோக்கும் ஊழியர்கள்