பாலத்தின்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் எலும்புக்கூடு: இறந்து 6-12 மாதம் இருக்கலாம் – யார் என்றே தெரியாத மர்மம்!

kallang-body-bridge
Google Maps & Lianhe Wanbao

ஒரு வருடத்திற்கு முன்னர் கல்லாங் பாருவில் உள்ள பாலத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கில் வெளிப்படையான தீர்ப்பை நீதிபதி ஆடம் நகோடா நேற்று ஜனவரி 12, 2022 அறிவித்தார் என CNA தெரிவித்துள்ளது.

அந்த உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார் என்று இன்னும் அடையாளம் காண முடியதாக சூழல் நிலவுகிறது.

சிங்கப்பூரில் எப்போது GST வரி உயர்த்தப்படும்? – அமைச்சர் பதில்

சிங்கப்பூரில் தீர்க்கப்படாத 18 காணாமல் போன நபர்களின் வழக்குகளுடன் இதை இணைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இறந்தவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.

அவரை பற்றிய கூடுதலான புதிய பதில்களை வழங்க புதிய தகவல் அல்லது ஆதாரங்களோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

நீதிபதியின் இந்த வெளிப்படையான தீர்ப்பு, சந்தேகத்திற்கிடமான மரணத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனால், அதற்கான ஒரு குறிப்பிட்ட காரணத்தை அது தீர்மானிக்காது.

இதுவரை வெளிவந்துள்ள உண்மைகள்

கடந்த நவம்பர் 9, 2020 அன்று நண்பகலில், 1 Kallang Place பாலத்தின் கீழ் அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் 30-60 வயதுக்கு இடைப்பட்ட ஆடவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உடலில் எந்த வித ஆயுத காயங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதே போல, எந்த சதிச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி சாமர்த்தியமாக கடத்தி வந்த தங்கத்தை கண்டறிந்த அதிகாரிகள்!