ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்..!

(Photo: SkillsFuture official website)

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும், வர்த்தக தொழில் அமைச்சும் நடத்திய புதிய ஆய்வு ஒன்றில் தங்களது ஊழியர்களை மறுதிறன் பயிற்சிக்கு அனுப்பும் தொழில் நிறுவங்களின் வருவாய் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஊழியர்களின் பயிற்சிக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் வரை இந்த வருவாய் உயர்வு நீடித்தது.

நிறுவனங்களின் தொழிலாளர் உற்பத்தியும் ஆண்டிற்கு சராசரியாக
2.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஈராண்டுகளுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.

2010 – 2018ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், பயிற்சிக்கு தங்களது ஊழியர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு கிடைத்த பலன்களை ஆய்வு கண்டறிந்தது. தேசிய கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹூவாங் கருத்தரங்கத்தில் பேசிய போது தொழில் நிறுவனங்களையும் விரைந்து செயல்படும் ஊழியரணியையும் உருவாக்குவதில் வாழ்நாள் கற்றல் முக்கியம் என்று வலியுறுத்தினார்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி ஆகஸ்ட் 22ஆம் தேதி முடிவடைகிறது. இதில் சமூக, கல்வி, தொழில் துறை பங்காளிகள் பங்கேற்கின்றனர். இதில் 50,000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஊக்கமளிப்பதாகவும், ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்வதில் நிறுவனங்களுக்கு சிறந்த பலன்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது என்று திருமதி கான் தெரிவித்தார்.

நாடுகள், நிறுவனங்கள் இயங்கும் முறை, தனிநபர்கள் வாழும் முறை ஆகியவை மாற கொவிட்-19 காரணமானதாக அவர் கூறினார்.

திறன் மேம்பாடு பயிற்சியில் ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்கால வாய்ப்புகளை கைப்பற்ற முடியும் என திருமதி கான் தெரிவித்தார்.