அடடே!அற்புதமான தோற்றம் ! – சன்னல் வழியாக பால்வெளிவீதியை படம்பிடித்த சிங்கப்பூரர்

skyspotting milkyway singapore ASTROIMAGE

சரியான கருவிகளின் துணையுடன்,சிங்கப்பூர் போன்ற ஒளி மாசுபாடுள்ள நாட்டில் பால்வீதியைக் கூட பார்க்க முடியும்.வானிலை அனுமதித்தால் தன் வீட்டின் சன்னல் வழியாகக் கூட காணலாம்.சிங்கப்பூரின் Ang Mo Kio-வில் உள்ள ஒருவர் தனது வீட்டுக்கூடத்தின் சன்னலிலிருந்து பால்வெளி வீதியை படம் எடுத்ததன் மூலம் நிரூபித்தார்.

பால்வெளி வீதியின் அற்புதமான புகைப்படத்தை Cloudspotting&Skyspotting Singapore என்ற முகநூல் பக்கத்தில் 33 வயதான ஜோசுவா சுவா என்பவர் பதிவேற்றினார்.கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதியன்று வானிலை தெளிவாக இருந்த போது இரவு 11:00 மணிமுதல் 11:4 5 வரை குறைந்தபட்ச மேகங்கள் இருந்தபோது சுமார் 10 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன

சிங்கப்பூரில் இது போன்ற தருணங்கள் மிகவும் அரிதானவை.மேகமற்ற இரவுகள் வானியல் புகைப்படங்கள் எடுப்பதற்கு சிறந்த வானிலையாக இருந்தாலும்,சிங்கப்பூரில் பெரும்பாலும் சில மேகங்கள் எப்போதும் இருப்பதால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மென்பொருள் மூலம் வடிகட்ட வேண்டும் என்று கூறினார்.

இருப்பினும் பால்வேளிவீதியின் மிகத்தெளிவான புகைப்படம் என்பதால் அவரது முயற்சிகள் மதிக்கத்தக்கவை.தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் செயற்கைக்கோள் சேவை மற்றும் கிளியர் அவுட்சைடு என்ற செயலியைப் பயன்படுத்தி வானிலையை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.