‘சிறிய ரக விமானம் விழுந்து கோர விபத்து’- எங்கு தெரியுமா?

'சிறிய ரக விமானம் விழுந்து கோர விபத்து'- எங்கு தெரியுமா?
Video Crop Image

 

சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

‘சென்னை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

மலேசியா நாட்டின் சுற்றுலா தீவான லாங்கவியில் இருந்து தனியார் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறிய ரக விமானத்தில் விமானி, விமான ஊழியர்கள், பயணிகள் என 8 பேர் பயணித்துள்ளனர். தலைநகர் கோலாலம்பூரை நோக்கிப் பறந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து செலங்கார் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதி தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், சாலையில் விமானம் மோதிய போது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

விமான விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விமானத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

லாரியில் பாதுகாப்பு இல்லை… வழக்கில் வெற்றிபெற்ற வெளிநாட்டு ஊழியர் – இழப்பீடு S$100,000 ?

விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கடைசி நிமிடங்களில் விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் அதில் பதிவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் அந்நாட்டு பிரதமர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.