ஸ்மார்ட் போன்களில் வைத்து தங்கம் கடத்தல்…..திருச்சி விமான நிலையத்தில் பயணியை மடக்கிய அதிகாரிகள்!

ஸ்மார்ட் போன்களில் வைத்து தங்கம் கடத்தல்.....திருச்சி விமான நிலையத்தில் பயணியை மடக்கிய அதிகாரிகள்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் (Trichy International Airport) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் மியூசியத்தில் கோயில் சிலைகள்….தகவல் தெரிவிப்போருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் (Trichy Customs Officers) விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் (Malindo Airlines) நிறுவனத்தின் விமானம், ஜூன் 03- ஆம் தேதி இரவு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அத்துடன், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அவரது உடைமைகளில் சுமார் 181 கிராம் எடைக்கொண்ட தங்கச் சங்கிலி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், அவரை சோதனை செய்ததில் பேண்ட் 201 கிராம் எடையுள்ள 39 செவ்வக வடிவ மெல்லிய தங்கத் தகடுகள் ஸ்மார்ட்போன்களில் மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர ஆட்சியரிடம் மனைவி மனு!

பறிமுதல் செய்யப்பட்டத் தங்கத்தின் மொத்த எடை 382 கிராம் என்றும், மொத்த மதிப்பு 22.52 லட்சம் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.