ஜூலை முதல் சிங்கப்பூரில் இங்கெல்லாம் புகை பிடிக்க தடையா – மீறி புகைத்தால் என்ன தண்டனை ?

smoking banned in public parks and beaches

சிங்கப்பூரில் உள்ள அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் 10 கடற்கரைகளில் ஜூலை 1, 2022 முதல் புகைபிடிக்க தடை. அடுத்த மாதம் முதல் அனைத்து பொது பூங்காக்களில்  புகைபிடிப்பது தடைசெய்யப்படும் என்றும் நீர் தளங்கள் மற்றும் 10 பொழுதுபோக்கு கடற்கரைகளிலும் புகைபிடிப்பது தடைசெய்யப்படும் என்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூத்த அமைச்சர் அமி கோர் ஏற்கனவே கூறியிருந்தார்.

 

புகை பிடிக்க தடை செய்யப்படும் நீர் தளங்கள்

  • கல்லாங் நதி
  • அலெக்ஸாண்ட்ரா கால்வாய்
  • பெடோக் நீர்த்தேக்கம்
  • லோரோங் ஹாலஸ் பாலம்
  • செங்காங் மிதக்கும் வெட்லான்ட்
  • பெரிய வடிகால்களுக்கு அருகிலுள்ள பகுதிகள்
  • ஆறுகளுக்கு அருகிலுள்ள கால்வாய்கள்

 

புகை பிடிக்க தடை செய்யப்படும் கடற்கரைகள்

  • சாங்கி கடற்கரை
  • ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை
  • வெஸ்ட் கோஸ்ட் கடற்கரை
  • செம்பவாங் கடற்கரை
  • பாசிர் ரிஸ் கடற்கரை
  • புங்கோல் கடற்கரை
  • கோனி தீவில் உள்ள கடற்கரை பகுதிகள்
  • சிலோசோ கடற்கரை
  • தஞ்சோங் கடற்கரை
  • செந்தோசாவில் உள்ள பலவான் கடற்கரை

 

இதற்கு மூன்று மாத அவகாச காலம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், அமலாக்கம் அக்டோபர் 1, 2022 முதலும் வரும். மேலும் S$200 அல்லது S$1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.