தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைப்பிடித்து, அதிகாரியை திட்டிய ஆடவருக்கு S$3,000 அபராதம்

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் 34 வயதான ஆடவர் ஒருவருக்கு தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் (NEA) அமலாக்க அதிகாரியை திட்டியதற்காக S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புகைபிடிக்க தடைசெய்யப்பட்ட பகுதிக்கு வெளியே புகைபிடித்து கொண்டிருந்த ஆடவர், அதிகாரியிடம் பிடிபட்டார்.

வெளிநாட்டு ஊழியர்கள் விபத்து: 7 ஊழியர்கள் மருத்துவமனையில்… இருவர் ICUவில் சிகிச்சை

பின்னர், அதிகாரி வழங்கிய சம்மனை அவர் நிராகரித்தார் என்றும், மோசமாக திட்டியதாகவும், மேலும் இது குறித்து காவல்துறையை அழைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 20), முஹம்மது ரெய்னி மொக்தார் என்ற அந்த ஆடவர் மீது பொது ஊழியரிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 7 லக்கி பிளாசா மாலில் வரையறுக்கப்பட்ட புகைபிடிக்கும் பகுதிக்கு வெளியே புகைபிடித்தற்காக அந்த அதிகாரி அவருக்கு சம்மன் வழங்கினார்.

பொது ஊழியரிடம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, அவருக்கு ஒரு வருடம் வரை சிறை அல்லது S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு தொற்று!