சிங்கப்பூரில் நிகழ்ந்த அரிய சூரிய கிரகணத்தைப் பார்த்து வரும் மக்கள்!

Photo: Singapore Science Centre

150 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியா நாட்டில் இன்று (ஏப்.20) நிகழ்கிறது. அதேபோல், ஆஸ்திரேலியா நாட்டை ஒட்டிய சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சில இடங்களில் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும்.

“13 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!

சிங்கப்பூர் நேரப்படி, காலை 10.54 AM மணி முதல் மதியம் 12.58 AM மணி வரை நிகழும் சூரிய கிரகணம், காலை 11.55 AM மணிக்கு உச்சத்தை அடையும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் (Singapore Science Centre) குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, சூரியனின் 15% மட்டுமே நிலவு மறைக்கும்.

சூரிய கிரகணத்தை நேரடியாக காண வேண்டாம் என்றும், சன் கிளாஸ் உள்ளிட்ட மூக்கு கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களை சிங்கப்பூர் அறிவியல் நிலையம் கேட்டுக் கொண்டது. அதேபோல், அதற்கென உள்ள கருவிகளைக் கொண்டு பார்க்கலாம்.

அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

பொதுமக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க, சிங்கப்பூர் அறிவியல் நிலையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் நின்றவாறு சூரிய கிரகணத்தைக் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சூரிய கிரகணத்தை சிங்கப்பூர் அறிவியல் நிலையம் https://youtu.be/PoHyQNASZ4c என்ற யூடியூப் பக்கத்தில் நேரலையாக செய்து வருகிறது.