சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்களை விக்கிபீடியாவில் மாற்றி கேலி செய்யும் மர்ம நபர்கள்!

Someone Keeps Changing Singapore Universities’ Names On Wikipedia To Something Stupid

சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களை விக்கிபீடியாவில் சில மர்ம நபர்கள் மாற்றி கேலி செய்து வருகின்றனர்.

இந்த செயல் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் அரங்கேறி வந்தது. இதனை அடுத்து திரும்பவும் அந்த கேலி பதிவுகள் மாற்றப்பட்டது பழைய நிலைமைக்கு திரும்பியது.

விக்கிபீடியில் பெயர்மாற்றப்பட்டு சரிசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் சில :

1. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்:

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (National university of singapore) பெயரை “National university of sexual misconduct” என்ற பெயரில் சில மர்ம நபர்கள் மாற்றி இருந்தனர்.

பிறகு, இது 10 நிமிடத்திற்குள் கண்டறிய பட்டு தவறு சரிசெய்யப்பட்டது.

2. சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம்:

சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (Singapore management university) என்ற பெயரை “singapore management university of Ang Moh ” என்று மாற்றப்பட்டுருந்தது.

பிறகு, இது அதிக நேரம் நீடிக்கவில்லை 2 நிமிடத்திற்குள் தவறு சரிசெய்யப்பட்டது.

3. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்:

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Nanyang technological university) என்ற பெயரை “Nanyang technological university of china” என்று மாற்றப்பட்டுரிந்தது.

இதற்கு காரணம் அங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்றும் கூறப்படுகின்றது.

4. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்:

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (singapore University of social sciences) என்ற பெயரை “Singapore University of self study” என்ற பெயரில் மாற்றப்பட்டு இருந்தது.

இதன் காரணம் இந்த பல்கலைக்கழகத்தில் மிகக்குறைந்த அளவிலான செமினார் வகுப்புகள் எடுக்கப்படுவதன் காரணம் தான் என்று கூறப்படுகிறது.

விக்கிபீடியாவில் ட்ரோல் செய்ய வேண்டாம் :

விக்கிபீடியா ஒரு பொது கலைக்களஞ்சியம். இது யார்வேண்டாலும் திருத்தி மாற்றி எது வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் வகையில் எளிதானதாக அமைந்திருக்கும்.

விக்கிப்பீடியாவில் உள்ள சில உண்மை தவறுகளை திருத்தி மாற்றம் செய்யும் நல் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், வெளிப்படையாக நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ளும் இதுபோன்ற பல்கலைக்கழகங்களின் பெயர்களை முட்டாள்தனமாக மாற்றுவது ஒரு தவறான செயலாகும்.