68வது தேசிய திரைப்பட விருதுகள் – விருதுகளை சூறையாடிய சூரரைப் போற்று !

Suriya and Aparna

68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சூரரைப் போற்று படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார், அதே சமயம் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை அஜய் தேவ்கனுடன் பகிர்ந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகளில் ஐந்து தேசிய விருதுகளை தமிழ் திரைப்படமான “சூரரைப் போற்று” பெற்றுள்ளது.

சூரரைப் போற்று சூறையாடிய விருதுகள் :

  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த நடிகர்
  • சிறந்த நடிகை
  • சிறந்த பின்னணி இசை
  • சிறந்த திரைக்கதை

இத்திரைப்படத்தை  சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதைக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் விருதுகளை பெற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூர்யாவிற்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பல்வேறு திரைத்துறையினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது நடிகர் சூர்யாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மென்மேலும் இதுபோன்ற திரைப்படங்களில் நடித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.