சிங்கப்பூர் – ஸ்பெயின் இருதரப்பு விவாதம் ;G20 மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்த பிரதமர்!

லீ; pc-minstry of information
G20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் லீ ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்துப் பிரதமர்களைச் சந்தித்துப் பேசினார்.மாநாட்டுக்கு இடையே ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ்ஸும் (Pedro Sánchez) சிங்கப்பூர் பிரதமரும் சந்த்தித்துக் கொண்டனர்.
சிங்கப்பூரும் ஸ்பெயினும் (Spain) இருதரப்புக்கும் இடையிலான நெருக்கமான உறவை உறுதிப்படுத்தியுள்ளன.பிரதமர் பெட்ரோவுடனான சந்திப்பு மிக ஆக்கமானதாக இருந்தது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
இரு நாடுகளிலும் மின்னிலக்கமயம், அறிவார்ந்த நகரங்களை உருவாக்குதல் உள்ளிட்ட துறைகளில் கூட்டுமுயற்சியை மேலும் உறுதிப்படுத்துவது குறித்து விவாதித்ததாகக் கூறினார்.நெதர்லாந்துப் பிரதமர் மார்க் ரட் (Mark Rutte) திரு. லீயை சந்தித்துப் பேசினார்.
இருவரும் உலக நடப்புகள் குறித்துக் கலந்தாலோசித்தனர்.உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் இங்கோஸி ஒக்கொன்ஜோ இவாலாவும் பிரதமர் லீயை சந்தித்தார்.