NE நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த P5 மாணவர்களுக்கு இலவச ரயில் பயணம் !

MRT

தேசிய கல்வி (NE) நிகழ்ச்சிகள் மீண்டும் முழு ஆரவாரத்துடன் தேசிய தின அணிவகுப்புடன் (NDP) திரும்பியுள்ளன. இந்த ஆண்டு NE நிகழ்ச்சிகளைப் பார்க்க P5 மாணவர்களுக்காக ஒரு சில MRT ரயில்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பள்ளிகளுக்கு அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட MRT நிலையங்களில் ரயில்கள் நின்றன. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே நிறுத்தத்தில் செல்லும் ஒரே ரயிலைப் பயன்படுத்தின.

பயணத்திற்கு பள்ளிகள் பணம் செலுத்தவில்லை, ஆனால் NDP குழுவால் செலுத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ரயிலும் சுமார் மூன்று பள்ளிகள்  பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் SMRT ரயில்கள் இதற்கு தேசிய தின அணிவகுப்பு அமைப்பாளர்களால்  அணுகப்பட்டதாகவும், பார்வையாளர்கள் தடையற்ற பயணங்களை மேற்கொள்ளவும் சென்று வருவவதற்குமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த SMRT ரயில்களின் சிறப்பு ஏற்பாடு நல்ல முறையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.