உலக சாதனைப் படைத்த சிங்கப்பூரர்.. நீருக்கடியில் 9.29 வினாடிகளில் Rubik’s Cube சேர்த்து புதிய சாதனை

Speed cubing Singaporean Guinness World Records
Guinness World Records/Facebook.

சிங்கப்பூரைச் சேர்ந்த டேரில் டான் ஹாங் ஆன் என்ற 22 வயது இளைஞர், Rubik’s Cube விளையாட்டில் 12 கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்று சாதித்துள்ளார்.

விரைவாக கியூபிங் சேர்த்து அவர் வென்ற இந்த 12 பட்டங்கள், உலகில் வேறு யாரும் வென்றதில்லை என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது பேஸ்புக்கில் கூறியது.

பிளம்பிங், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட வேலைகளில் உள்ள 133,000 வெளிநாட்டு ஊழியர்கள்… நடுத்தர சம்பளம் S$2,700.. சராசரி சம்பளம் S$3,100

சிங்கப்பூரின் நீருக்கடியில் அவர் கியூபிங் செய்யும் சாதனையையும் கின்னஸ் நிறுவனம் ஃபேஸ்புக்கில் மறுபதிவு செய்தது.

கின்னஸ் உலக சாதனை இணையதளத்தின் படி, 2023 இல் மட்டும் ஐந்து சாதனைகளை படைத்துள்ளார் டான்.

Juggling வித்தை செய்து கொண்டு, 100மீ ஓட்டம் ஓடி கொண்டு, ஹோவர்போர்டில் சவாரி செய்து கொண்டு, டேபிள் டென்னிஸ் விளையாடி கொண்டு மற்றும் நீருக்கடியில் மூழ்கி இருந்தும் க்யூப்களை நிறைவு செய்து அவர் சாதித்துள்ளார்.

நீருக்கடியில் வெறும் 9.29 வினாடிகளில் க்யூப்களை நிறைவு செய்து புதிய சாதனையை அவர் படைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலவரப்படி, ஒரே நாளில் ஏழு சாதனைகளை அவர் செய்தார் என்பது கூடுதல் தகவல்.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: சிக்கிய மதுபான கடைகளும், ஊழியர்களும்..