சிங்கப்பூர் வருகிறது ஸ்பைடர்மேன்-நோ வே ஹோம் இன் விரிவாக்கப்பட்ட பதிவு – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

spiderman no way home release in singapore

செப்டம்பர் 1, 2022 முதல் ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் படத்தின் விரிவாக்கப்பட்ட பதிவு, சிங்கப்பூர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. கூடுதல் காட்சிகளுடன் திரையரங்குகளுக்குத் திரும்பும், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம். இத்திரைப்படத்தின் விரிவாக்கப்பட்ட பதிவு செப். 1, 2022 முதல் ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021ல் வெளியான இத்திரைப்படம், US$1.9 பில்லியனை (S$2.64 பில்லியன்) வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் வசூல் சாதனை படைத்தது
இந்த நீட்டிக்கப்பட்ட பதிவு குறித்த அறிவிப்பு, 14-வினாடி டீஸர் மூலம் ஜூன் 11, 2022 அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இப்பதிவு “The More Fun Stuff Version” என அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

வெளியிடப்பட்ட டீஸரில் இடம்பெற்றுள்ள ஸ்பைடர் மேன் நடிகர்களான டாம் ஹோல்லண்ட், டோபேய் மாகுவேர் மற்றும் ஆண்ட்ரியு கார்பீல்ட் என அனைவரும் இத்திரைப்படத்தில் உள்ளனர்.

மேலும் செப்டம்பர் 2 முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் விரிவாக்கப்பட்ட பதிவு வெளியிடப்படும் என்று ட்விட்டர் பதிவில் படக்குழு அறிவித்துள்ளது.