பள்ளி மாணவிகள் மீது துப்பிய நபர்! – என்ன துப்பினார் தெரியுமா?;கண்டித்த நீதிபதி!

JUDGEMENT

சிங்கப்பூரில் பள்ளி மாணவிகள் மீது துப்பிய உணவு விநியோக ஊழியருக்கு ஏறக்குறைய 3 மாதச் சிறைத்தண்டனையும் 3000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.இவர் மின்-சைக்கிள்களிலிருந்து பேட்டரிகளைத் திருடியதோடு அவற்றின் பிரேக்குகளையும் அறுத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

27 வயதுடைய தோ ஜுன் ஷெங் அவரது 5 குற்றங்களையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அன்று அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது வழியில் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் மீது மீது bubble tea எனப்படும் குளிர்பானத்தில் இருக்கக்கூடிய pearls என்ற உருண்டைகளைத் துப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு மாணவிகளும் உடனடியாக தங்கள் பள்ளி நிர்வாகத்தில் தெரிவித்தனர்.மாணவிகள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தோ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தோவின் தரப்பு வழக்கறிஞர்,இனி தோ அந்த குளிர்பானத்தை உட்கொள்ளமாட்டார் என்றும் அவ்வழியாகச் சென்ற மாணவிகள் மீது தெரியாமல் துப்பினார் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தோவின் செயலைக் கேட்டறிந்த நீதிபதி கடுமையாக கண்டித்தார்.பின்னர்,மாணவிகள் மீது அவர் அவ்வாறு துப்பியதற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது.