சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு – கத்தார் ஏர்வேஸ் விமானத்தை பின்னுக்கு தள்ளி சாதனை

spore-airlines-named-2023-worlds-best-airline
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனம் மீண்டும் உலகின் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருந்தது, அதை பின்னுக்கு தள்ளி SIA மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான Skytrax World Airlines விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஜூன் 20 அன்று பாரிஸில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?

அங்கு முதல் விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: விமான வளர்ச்சிக்காக அயராது உழைத்து பல தியாகங்களைச் செய்தவர்களுக்கு இந்த விருது சான்றாகும் என்று கூறினார்.

அதனால் தொற்றுநோயிலிருந்து வலுவாக மீட்சியடைந்து தற்போது முன்னணி சர்வதேச விமான நிறுவனம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Skytrax விருதுகள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதத்துக்கும் இடையில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளிடம் நடந்தது.

அதில் பயணிகள் சுமார் 325 க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்தனர்.

அந்த கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு SIA முதலிடத்தை பிடித்தது.

அதே போல குறைந்த கட்டண விமான நிறுவனமான Scoot, “நீண்ட தூரம் செல்லும் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்” மற்றும் உலகின் சிறந்த Low-cost விமான நிறுவனங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்