சிங்கப்பூரில் அதிகரிக்கும் ஊழியர்கள் ஆட்குறைப்பு… குடிமக்களுக்கு குறையும் வேலையின்மை

சிங்கப்பூர் பட்ஜெட்
Singapore Jobs

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்த வண்ணமே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், ஆட்குறைப்பு நடவடிக்கையும் அதிகரித்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் காலாண்டின் அடிப்படையில் சுமார் 4000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கடந்த 2022 ஆம் ஆண்டு கடைசி காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், அப்போது 2900 க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவரங்களை இந்த ஆண்டுக்குரிய தொழிலாளர் சந்தை முன்னோட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எனினும், மார்ச் மாதத்தில் வேலையின்மை குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.