இந்தியாவுக்கு வந்து இதை செய்வது மிக தவறு… சிங்கப்பூர் ஆடவரை கைது செய்த போலீஸ்

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சிங்கப்பூர் ஆடவர் அலெக்சாண்டர் லீ ஜியா ஜூன் என்பவர் ஆகஸ்ட் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

23 வயதான அவர் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளமான மணாலிக்கு வந்துள்ளார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய குழுமத்துடன் Jetstar நிறுவனம் பேச்சுவார்த்தை

அங்கு ரஷ்யப் பெண்ணை கற்பழித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஆகஸ்ட் 26 அன்று மணாலியின் ரிசார்ட் நகரத்தில் நடந்தது.

மணாலியில் தனது தாயுடன் வசித்து வரும் 38 வயதான ரஷ்யப் பெண்ணை நாசம் செய்ததாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டார்.

நட்பாக பழகிய ஆடவர், பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து நாசம் செய்துள்ளதாக அந்த பெண் போலீசிடம் புகார் செய்தார்.

அவர் ஜூலை மாதம் சுற்றுலா விசாவில் மணாலிக்கு வந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை, அடுத்த மாதம் செப்., 2ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வேலை தேடும் சிலருக்கு நற்செய்தி: புதிய Work Pass அறிமுகம்