வெளிநாட்டு ஊழியர் அழுது புலம்பும் காட்சி – “சிங்கப்பூரர் / PR இல்லாமல் எப்படி வேலை செய்யலாம்”.. பிடித்து மிரட்டிய ஆடவர்

வெளிநாட்டு ஊழியர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்தது தற்போது பேச்சு பொருளாக மாறியுள்ளது.

சிங்கப்பூர் நாட்டவர் அல்லது PR மட்டுமே உணவு விநியோக வேலைகளில் சேர முடியும். Foodpanda இணையதளத்தின்படி, தனிநபர்கள் அவர்களுடன் பணியாற்ற சிங்கப்பூரர் அல்லது நிரந்தர வாசியாக (PR) இருக்க வேண்டும்.

இந்நிலையில் ஆடவர் ஒருவர் அந்த வெளிநாட்டு ஊழியரை பிடித்து மிரட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்ச்சர்ட் சாலையில் இருந்த ஊழியரை சிங்கப்பூர் ஆடவர் பிடித்து எடுத்த வீடியோ, எஸ்ஜி ரோடு விஜிலன்ட் – எஸ்ஜிஆர்வி என்ற Facebook குழுவில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வீடியோவில் அவர் அழுது புலம்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை கண்ட சக ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டலுக்கு பயந்து, “நான் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், விட்டுவிடுங்கள்” என ஊழியர் அழுகும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், தொடர்ந்து வீடியோ எடுத்த சிங்கப்பூர் நபர் அவரை பற்றி கவலைப்படவில்லை. அந்த ஊழியரை காட்டி “சட்டவிரோத ஊழியர், எங்கள் உள்ளூர் டெலிவரி வேலையைச் செய்கிறார்” என்று குற்றம் கூறினார்.

ஊழியரின் போனில் இருந்து அவர் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் அவரின் பெயர் ஆகியவற்றையும் ஆடவர் படமாக எடுத்து வெளியிட்டு காட்டியுள்ளார்.