சொந்த நாட்டுக்கு சென்ற சிங்கப்பூர் PR மீது கடும் தாக்குதல்: NRIC, பாஸ்போர்ட், பணத்தை பறித்துக்கொண்டு மர்ம கும்பல் ஓட்டம்

sporean-pr-mugged passport NRIC
Photo courtesy of Bahara

வெளிநாட்டுக்கு சென்ற சிங்கப்பூர் நிரந்தவாசி (Singapore PR) மீது கொள்ளையர்கள் கடும் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

வணிக நிமித்தமாக அவர் இந்தோனேசியாவின் படாமிற்குச் சென்றுள்ளார், அங்கு தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு – இனியும் அதே தான்

பஹாரா என்று சொல்லப்படும் அந்த நபர் இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர் என்றும், சிங்கப்பூரில் PR அந்தஸ்து பெற்றதாகவும் கூறினார். அவரது மனைவி சிங்கப்பூரை சேர்ந்தவர். பஹாரா கடந்த சில வாரங்களாக வணிக நிமித்தமாக பாத்தாமில் இருந்தார்.

கடந்த ஜூலை 26 அன்று, பொதுவாக சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் நகோயா ஃபுட்கோர்ட் உணவகத்தில் அவர் இருந்தார்.

அதிகாலை 3 மணி ஆன நிலையில், அவர் தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டி டாக்ஸிக்காக காத்திருந்தார். அப்போது அந்த பகுதி அமைதியாகவும், மக்கள் நடமாட்டம் குறைவாகவும் காணப்பட்டுள்ளது.

அவர் மொபைல் போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, அவர் தலையின் பின்புறத்தில் பலமாக யாரோ அடித்ததாகவும், அதைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு முறை தொடர்ந்து அடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒன்னும் செய்யமுடியாது பாதி மயக்கத்தில் அவர் இருக்க, இரண்டு பேர் அவரின் உடைமைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதில் அவரது NRIC, ரொக்கம், கிரெடிட் கார்டுகள், போன் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை இருந்ததாகவும் கூறியுள்ளார் அவர்.

இதில் அவருக்கு 17 தையல்கள் போடப்பட்டதாகவும், அவரை மரக்கட்டையை கொண்டு அவர்கள் அடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் போலீசில் புகார் கொடுத்தார். தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

துவாஸ் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – மயக்க நிலையில் கிடந்தவர் மரணித்த சோகம்