குண்டக்க மண்டக்க மொழி பெயர்க்கப்பட்ட Spotify பாடல்கள் – குழம்பிய பயனர்கள் !

Spotify

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, Spotify இல் உள்ள Mandopop பிரியர்கள் மிகவும் வித்தியாசமான சூழலை எதிர்கொண்டனர். பாடல் தலைப்புகள் அருவருக்கத்தக்க வகையில் மொழிபெயர்த்து காட்டப்பட்டன. இச்சம்பவத்தை Spotify பயனர்கள் தங்கள் சமூக இடுகையில் பகிர்ந்து கொண்டதில் 230 கருத்துகளைப் பெற்றது.

இது தங்களின் இசை கூட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பன்மொழித்தரவு சம்பந்தப்பட்ட ஒரு பரிசோதனை என்று Spotify பிரதிநிதி ஒருவர் தெளிவுபடுத்தினார். மேலும் அவர், Spotify இல், தாங்கள் எப்போதும் தங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய வழிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தங்களின் இசைக் கூட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பன்மொழித் தரவைச் சோதித்ததைப் பற்றியும் கூறினார்.

தற்போது மொழிபெயர்க்கப்பட்ட தலைப்புகளை அவற்றின் அசல் மொழிக்கே மாற்றியுள்ளோம் என்றும் இது சில பயனர்களுக்கு இன்னும் மாறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் இந்த சிக்கலை அனுபவிக்கும் பயனர்கள் இதைத் தீர்க்க தங்கள் செயலியின் cacheயை அழிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.