ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்- இந்து அறக்கட்டளை வாரியத்தின் அறிவிப்பு!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலில் கீழ் வரும் மாற்றங்கள் ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம் நாளன்று (டிசம்பர் 26) பொருந்தும். டிசம்பர் 26- ஆம் தேதி அன்று காலை 06.30 AM மணி முதல் 11.30 AM மணி வரை மற்றும் மாலை 06.00 PM மணி முதல் இரவு 08.30 PM மணி வரை கோயில் திறந்திருக்கும்.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை – டிசம்பர் 29 முதல் தொடக்கம்!

முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கோவிட்- 19 பரிசோதனையில் (Pre- Event Testing) தொற்று இல்லையென்று உறுதிச் செய்யப்பட்ட சான்றிதழை காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். நெய் அபிஷேகத்திற்கு பக்தர்கள் http://svkt.org.sg/Services/MassEvent எனும் இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் நெய் அபிஷேகத்தைச் செலுத்திவிடுவார்கள். காலை 08.30 AM மணி முதல், நெய் அபிஷேகத்தின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.

‘ஒமிக்ரான்’ பரிசோதனையை அதிகப்படுத்த சென்னை உள்பட 4 விமான நிலையங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு!

12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.