ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை!

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வரும் செப்டம்பர் 06- ஆம் தேதி முதல் செப்டம்பர் 10- ஆம் தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

கோயில் உண்டியலில் ஆயிரக்கணக்கான பணத்தை திருடிய இருவர் – CCTV காட்சிகளில் பகீர்

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி (Sri Krishna Jayanthi), ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) வரும் செப்டம்பர் 06- ஆம் தேதி முதல் செப்டம்பர் 12- ஆம் தேதி வரை காலை 07.00 மணி முதல் காலை 11.00 மணி வரை ஶ்ரீமத் பாகவதம் மூல பாராயணம் (Srimath Bhagavatham Moola Parayanam) நடைபெறும். செப்டம்பர் 06- ஆம் தேதி காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 10.00 மணிக்கு பால்குடமும் நடைபெறும்.

செப்டம்பர் 07- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் பிறப்பும், காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 08.00 மணிக்கு உரியடி உற்சவமும், செப்டம்பர் 08- ஆம் தேதி காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 07.30 மணிக்கு வெண்ணெய்த் தாழியும் நடைபெறும்.

40 மீட்டர் உயர டவர் கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியருக்கு திடீர் உடல்நலக்குறைவு..

அபிஷேக பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். செப்டம்பர் 06- ஆம் தேதி இரவு 10.00 மணி முதல் பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.