இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

Photo: Sri Lanka High Commission in Singapore Official Facebook Page

 

சிங்கப்பூர் நாட்டுக்கான இலங்கை தூதரகம் (Sri Lanka High Commission in Singapore) முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று (07/06/2021) வெளியிட்டது.

 

அந்த அறிவிப்பில், சிங்கப்பூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் (Safe Management Measures at Workplaces) குறித்த வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகள் வரும் ஜூன் 7- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

ஜூன் 7- ஆம் தேதி முதல் தூதரக சேவைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு தொடர்பாக consular@lanka.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புக் கொள்ளலாம். மேலும் தூதரக சேவைகள் தொடர்பான உதவிக்கு +65 6254 4595/6/7 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை வேலை நேரத்தில் தொடர்புக் கொள்ளலாம்.

 

தூதரக அவசர உதவிக்கு +65 8741 4011 மற்றும் +65 8654 6759 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம். மேலும், slhcs@lanka.com.sg என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புக் கொள்ளலாம்.

 

ஜூன் 7- ஆம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் தொழிலாளர் நலச் சேவைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இது தொடர்பாக முதல் செயலாளர் (தொழிலாளர் பிரிவு) சஜித் சாமிண்டா, +65 8499 1226 என்ற தொலைபேசி எண்ணையும், sajith@lanka.com.sg, rasika@lanka.com.sg என்ற மின்னஞ்சல்கள் முகவரியையும் தொடர்புக் கொள்ளலாம்.

 

இலங்கை தூதரகத்தின் முக்கிய அப்டேட்டுகளை www.lanka.com.sg என்ற இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம். மேலும், தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களான Sri Lanka High Commission in Singapore என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும், https://twitter.com/SLinSingapore என்ற ட்விட்டர் பக்கத்திலும் அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.