இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையில் நிலவும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூரர்கள் இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூர் உடற்பயிற்சி நிலையங்களில் நிரம்பி வழியும் கூட்டம் – மீண்டும் யோகா,நீச்சல்குளம் என செல்லும் சிங்கப்பூரர்கள்

இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். போராட்டங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை அவர்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அத்துடன் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

இலங்கைக்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் விரிவான பயணக் காப்பீட்டை வாங்கவும் (Travel Insurance), விதிமுறைகள் மற்றும் கவரேஜ் பற்றி நன்கு அறிந்திருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நிரந்தர பதிவு செய்யாதவர்கள் உடனடியாக https://eregister.mfa.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“சிங்கப்பூரில் வேலை ரெடி… டிக்கெட்டை போடுங்க” ஏமாந்த 100 பேர் – தமிழக இளைஞர்கள் கண்ணீர்

தூதரக உதவி தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தையோ (அல்லது) 24 மணி நேரமும் செயல்படும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தையோ தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

கொழும்புவில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகம், இலங்கை,
எண் 73, சர் ஜேம்ஸ் பீரிஸ் மாவதா (No 73, Sir James Peiris Mawatha),
கொழும்பு 02, இலங்கை,
தொலைபேசி எண்கள்: +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111,
மின்னஞ்சல் முகவரி: nawaloka@slt.lk.

24 மணி நேரமும் இயங்கும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்,
டாங்லின் (Tanglin), சிங்கப்பூர் 248163,
தொலைபேசி எண்கள்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.