ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவில் உட்பட 2 கோவில்களில் அன்னதான உணவுகளை வாங்க சென்று தகராறில் ஈடுபட்ட ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

49 வயதான தியோ கியாட் சியாங் என்ற அவர், தாமாக முன்வந்து தாக்கியது, பொது இடங்களில் தொல்லை மற்றும் அத்துமீறல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்

ஜனவரி 2, 2023 அன்று செராங்கூன் சாலைக்கு அருகிலுள்ள டவுனர் சாலையில் உள்ள சீக்கிய கோவிலுக்கு அவர் சென்றுள்ளார், அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

முதல் முறை வாங்கி சாப்பிட்டுவிட்டு, இரண்டாவது முறை எடுக்க சென்றவரை காத்திருக்கும் படி கூறியதை அடுத்து, பொறுமை இல்லாமல் அவர் சத்தம் போட்டதாகவும், நிர்வாகி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, கடத்த மே 20 அன்று, இந்துக்களின் வழிபாட்டுத் தலமான கல்லாங் சாலையில் உள்ள ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் இலவச உணவு வழங்கப்பட்டதால் தியோ அங்கு சென்றார்.

அங்கு அதிக அளவில் அவர் உணவை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட கோவில் மேலாளர், அங்குள்ள அனைவருக்கும் போதுமான அளவு உணவு இல்லை என்ற அக்கரையில் அவரை அணுக, அதற்கு தியோ கோபமடைந்து மேலாளரிடம் சத்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு delusional disorder என்னும் மாயபிம்ப கோளாறு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் குறையும் வேலைவாய்ப்பு.. ஊழியர்கள் வேலையில் இருந்துகூட நீக்கப்படலாம்