ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா….ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple) . இக்கோயில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. அனைத்து விஷேச நாட்களிலும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும். மேலும், இக்கோயிலுக்கு நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஹைதராபாத், சிங்கப்பூர் வழித்தடத்தில் ‘A350- 900’ விமானம் இயக்கப்படும்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தீமிதி திருவிழாவும் ஒன்று. இது ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா நேற்று (16/10/2022) மாலை நடைபெற்றது. தீமிதியில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். எனினும், முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டுமே அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டனர்.

தீமிதி விழாவை பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் தங்களது இல்லத்தில் இருந்தே காணும் வகையில், இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூ-டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள லிசா!

அக்டோபர் 14- ஆம் தேதி அன்று தொடங்கிய ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா, அக்டோபர் 17- ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறக்கட்டளை வாரியமும், கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பாக செய்திருந்தன.

தீமிதி திருவிழா நாளன்றும், வார இறுதியிலும், பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.