நவம்பர் 5- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா!

Sri Mariyamman temple Firewalking Ceremony

 

 

சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில், சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்

அந்த வகையில், வரும் நவம்பர் மாதம் 5- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், தீமிதி திருவிழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் வரும் ஆகஸ்ட் 21- ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் விழாவுக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.

தீமிதி திருவிழாவின் போது, பக்தர்கள் அங்கபிரதட்சணம், அக்னி குண்டத்தில் இறங்குவது, பால்குடம் ஊர்வலம் ஆகியவற்றுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம். கோயில் நேரடி முன்பதிவுக் கிடையாது. இதற்கான இணையதள முன்பதிவு வரும் செப்டம்பர் 25- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஆன்லைனில் தொடங்கும்.

ஆகஸ்ட் 20- ஆம் தேதி முதல் நவம்பர் 5- ஆம் தேதி வரை இடம் பெறவிருக்கும் தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகளை இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் நேரலையில் காண சிறப்பு வசதிச் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ சிவன் கோயிலில், மஹா ருத்ரம் பூஜை!

தீமிதித் திருவிழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.