‘ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கூழ் பூஜை’- பக்தர்களுக்கு அழைப்பு!

'ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கூல் பூஜை'- பக்தர்களுக்கு அழைப்பு!
Photo: Sri Mariamman Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) கூழ் பூஜை (Kool Poojai) நடைபெறும் என்றும், அதில் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறும் இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அழைப்பு விடுத்துள்ளது.

வீட்டில் இறந்து கிடந்த மனைவி.. கணவரும் மரணம்.. என்ன நடந்தது ? – போலீஸ் விசாரணை

இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கூழ் பூஜை நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 05.00 மணிக்கு சங்கல்பம், கலச பூஜையும், ஹோமமும், அதிகாலை 05.15 மணிக்கு ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு காயத்திரி மந்திர ஹோமமும், அதிகாலை 05.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 07.30 மணிக்கு சிறப்பு கூழ் பூஜையும் நடைபெறும்.

காலை 08.00 மணி முதல் காலை 11.00 மணி வரை நடைபெறும் கூழ் பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். காலை 10.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கூழ் பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த பயணி…. விமான நிலையத்தில் பரபரப்பு!

காலை 08.00 மணி முதல் காலை 11.00 மணி வரை கூழ் பூஜையில் கலந்து கொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.