மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று காலை 08.20 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு செய்யும் சிங்கப்பூர் – இந்திய வளர்ச்சிக்கு உதவும்!

அதைத் தொடர்ந்து, காலை 09.00 மணிக்கு மஹா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறவுள்ளது. பின்னர், காலை 09.30 மணி முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குவிந்துள்ளனர்.

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாகம செய்துள்ளது.

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்!

பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கும்பாபிஷேகத்தைக் காணும் வகையில், இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப்-பில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.