ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அழைப்பு!

Photo: Hindu Endowments Board Official site

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, பல மாதங்களாக இக்கோயிலில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது.

நீரில் மூழ்கி இறந்த சிறுவன்… 1.5 கிமீ சடலத்தை சுமந்துவந்து மீட்பு குழுவிடம் ஒப்படைத்த ராட்சத முதலை – கண்கலங்க வைக்கும் வீடியோ

இந்த நிலையில், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று காலை 07.25 மணி முதல் 09.15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. எனவே, பக்தர்கள் கும்பாபிஷேகம் தொடர்பான பூர்வாங்க சடங்குகளிலும், பூஜைகளிலும், மஹா கும்பாபிஷேகத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு இந்து அறக்கட்டளை வாரியமும், கோயில் நிர்வாகமும் அழைப்பு விடுத்துள்ளது.

மஹா கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 07.00 மணிக்குத் தொடங்கி, வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று காலை 06.30 மணிக்கு நிறைவு பெறும். பக்தர்கள் வரும் பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் பிப்ரவரி 11- ஆம் தேதி வரை காலை 09.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை அல்லது மாலை 06.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை யாகசாலை பூஜையில் ஒரு குழுவாகவோ அல்லது தனியாகவோ பங்கேற்கலாம். யாகசாலை பூஜையில் பங்கேற்பதற்கான கட்டணம் 201 சிங்கப்பூர் டாலர் ஆகும். யாகசாலை பூஜையில் பங்கேற்பவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசும், பிரசாதமும் வழங்கப்படும்.

சாங்கி விமான நிலையத்தில் தேவையில்லாமல் வாய்விட்டு மாட்டிக்கொண்டு வெளிநாட்டு ஊழியர் – S$2,000 அபராதம் விதிப்பு

மகா கும்பாபிஷேக தினத்தன்று மாலையில், ஸ்ரீவிஸ்வநாதர்-ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ வள்ளி தெய்வானை, ஸ்ரீராமர்-ஸ்ரீசீதாதேவி ஆகிய தெய்வ இணையினருக்குச் சிறப்பு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசையில் பங்கு கொள்ளலாம். திருக்கல்யாண சீர்வரிசை பொருட்களை கோயில் நிர்வாகமே வழங்கிவிடும். திருக்கல்யாண சீர்வரிசைக்கான பங்கேற்புக் கட்டணம் 21 சிங்கப்பூர் டாலர் ஆகும்.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜைகள் பிப்ரவரி 13- ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி சனிக்கிழமை வரை 48 நாட்களுக்கு மாலை 04.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடைபெறும். மண்டல பூஜைகள் ஏப்ரல் 1- ஆம் தேதி சனிக்கிழமை அன்று 108 கலசபிஷேகத்துடன் நிறைவுபெறும். பக்தர்கள் 21 சிங்கப்பூர் டாலர் கட்டணம் செலுத்தி கலசபிஷேக பூஜையில் பங்கேற்கலாம். ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு கலசம் வழங்கப்படும்.

மஹா கும்பாபிஷேக நாளில் காலை 09.00 மணி முதல் மேக்ஸ்வெல் (Maxwell) உணவங்காடி நிலையத்துக்கு எதிர்புறம் அமைக்கப்படும் கூடாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதான இடத்துக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும். அத்துடன், அங்கு இருந்தபடியே பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் காணும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BTO வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு! – கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய கழகம்..

அதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி அன்று காலை 09.30 மணி முதல் பக்தர்கள் வரிசையில் வந்து ஸ்ரீ மாரியம்மனை தரிசனம் செய்யலாம். ஸ்ரீ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு heb.org.sg என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்.

மஹா கும்பாபிஷேகம் மற்றும் அதற்கு முன்பாக நடக்கும் யாகசாலைப் பூஜைகள் உள்ளிட்டவை இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரலை செய்யப்படும். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.