இன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Indian slapping woman in Hindu temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) இன்று (16/02/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, சிங்கப்பூரில் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் (South Bridge Road) அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் (Sri Mariamman Temple) கீழ் வரும் மாற்றங்கள் பெளர்ணமி நாளான இன்று (16/02/2022) பொருந்தும். இரவு 08.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூரின் 74வது நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட சிலோசோ கோட்டை; அதன் சிறப்பம்சம் என்ன.?

முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பால்குட அபிஷேகத்திற்கு http://smt.org.sg/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கட்டணம் செலுத்தலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌணர்மி பூஜையைப் பார்க்க இயலாது.

மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடத்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

50 ஆண்டுகள் சிறப்பான உறவை கொண்டாடும் சிங்கப்பூர் – பங்களாதேஷ்: வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வாழ்த்து!

முதியோர், இளம் பிள்ளைகள், உடற்குறையுள்ளோர் ஆகியோர் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். பௌர்ணமி பூஜையின் நேரலையை https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப் பக்கத்தில் காணலாம்.

இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும், நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.