ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கல்யாணம்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page
சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சௌத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கல்யாணம் (Sri Drowpathai Amman Thirukkalyanam) நடைபெறும் என இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளைப் பார்வையிடலாம். அதன்படி, மாலை 06.00 மணிக்கு சீர்வரிசை, மாலை 06.15 மணிக்கு மாலையிடுதல், மாலை 06.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், இரவு 08.30 மணிக்கு மாங்கல்ய தாரணம், இரவு 08.45 மணிக்கு சுவாமி புறப்பாடு, இரவு 09.00 மணிக்கு அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பூஜைகளின் நேரலையை மாலை 06.15 மணி முதல் https://youtu.be/166jOzsULpk or https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். மேல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.