ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ‘ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்’ நடைபெறும் என அறிவிப்பு!

Indian slapping woman in Hindu temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூரில் சவுத் பிரிட்ஜ் சாலையில் (South Bridge Road) உள்ள ஸ்ரீ மாரியப்பன் கோயிலில் வரும் மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 3- ஆம் தேதி வரை ‘ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்’ நடைபெறும். இந்த நாட்களில் முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டப் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

இஸ்ரேல் அதிபருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

மார்ச் 24- ஆம் தேதி முதல் ஏப்ரல் 2- ஆம் தேதி வரை இரவு 07.30 மணி, ஸ்ரீ லட்சுமி பூஜைக்கு நாள் ஒன்றுக்கு 50 பதிவுகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும். பதிவு செய்ய, பக்தர்கள் 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

ஏப்ரல் 3- ஆம் தேதி காலை 09.00 மணி முதல், மஞ்சள்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலும் அல்லது http://smt.org.sg/ என்ற இணையப் பக்கத்திலும் வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக ஹைதராபாத்துக்கு ‘Non-VTL’ விமான சேவை- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் மஞ்சள்குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். பூர்ணாஹீதி தட்டு மட்டும் அபிஷேக பொருட்களை தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

வரும் ஏப்ரல் 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சத சண்டி மஹா யாக பூஜைகள் https://heb.org.sg/ என்ற இணையதள பக்கத்தில் காலை 08.00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.