ஸ்ரீ ராமர் கோயிலில் நடந்த மஹா சண்டி யாகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Photo: Sri Ramar Temple

சிங்கப்பூரில் உள்ள சாங்கி வில்லேஜ் சாலையில் (Changi Village Road) அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோயில் (Sri Ramar Temple). இந்த கோயிலுக்குள் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலும் உள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கருமாரியம்மன் சிலை மற்றும் வெள்ளி பதக்கத்தை பக்தர்கள், அதற்குரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொண்டனர்.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

ஸ்ரீ மஹா சண்டி யாகம் என்பது ஒரு பிரம்மாண்டமான யாகம் ஆகும். துர்கா தேவியின் அருளைப் பெறுவதற்கு செய்யப்படும் ஒரு யாகம் தான் மஹா சண்டி யாகம். இந்த யாகம் செய்வதால், வாழ்வில் ஏற்படும் தடைகள், தாமதங்கள் நீங்கும்.திருஷ்டிகள், மறைமுக எதிரிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள், குல சாபங்கள் அனைத்தையும் போக்கி செல்வம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.