பிப்.28 ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Google Maps

சிங்கப்பூரில் Geylang East Ave 2- ல் அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் எப்போது தொடங்கப்படும்.? – புதிய தகவல்.!

இந்த நிலையில், இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீ சிவன் கோயிலில் கீழ்வரும் மாற்றங்கள் மகா பிரதோஷம் நாளான வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று பொருந்தும்.

அதன்படி, பிப்ரவரி 28- ஆம் தேதி அன்று மாலை 03.20 மணி முதல் மாலை 04.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேக பொருட்களும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்தி விடுவார்கள்.

சிங்கப்பூரில் சட்டென்று எகிறிய கொரோனா பாதிப்பு… பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க இயலாது. மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல் தொடர்ந்து, நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது. மாலை 03.30 மணி முதல், பிரதோஷ பூஜையின் நேரலையை https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.

இந்த மாற்றங்களின் தொடர்பில், உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேலும் விவரங்களுக்கு கோயிலில் அலுவலகத்தின் 67434566 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.