மார்ச் 29- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

Photo: Hindu Endowments Board Official website

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ- 2ல் (24 Geylang East Avenue- 2) அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சிங்கப்பூர் நேரப்படி, மார்ச் 29- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.36 PM மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் கடத்தல்… “S$755 கமிஷன்” – உதவிய 9 பேருக்கு செக்

இந்த நிலையில், அன்றைய தினம் ஸ்ரீ சிவன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்றும், பக்தர்கள் கலந்துக் கொள்ளலாம் என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 29- ஆம் தேதி அன்று காலை 07.30 மணிக்கு யாக சாலை பூஜையும், சனிப்பெயர்ச்சி யாகமும், காலை 09.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், காலை 09.30 மணிக்கு பால்குட அபிஷேகமும், காலை 09.45 மணிக்கு நவகிரக தெய்வங்களுக்கும், ஸ்ரீ சனீஸ்வரன் கலசாபிஷேகமும் நடைபெறும்.

காலை 10.00 மணிக்கு எள்ளு மற்றும் எண்ணெய் தானமும், காலை 10.30 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெறும். பிரசாதம் விநியோகம் செய்யப்படும். மாலை 07.00 மணிக்கு உபய பூஜையும், சுவாமி புறப்பாடும் நடைபெறும். பால்குடம் செலுத்த விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்திய ஊழியரை காணவில்லை.. ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 67434566 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தெரிவித்துள்ளது.