ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 397 செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா (Brahmothsavam Prayers) நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம் விழா மார்ச் 9- ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது.

நீண்ட காலம் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் Rolex வாட்ச், தங்கக் கட்டி.. மாஸ் காட்டிய நிறுவனம்

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா, கடந்த மார்ச் 9- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியுள்ளது. மார்ச் 22- ஆம் தேதி புதன்கிழமை வரை பிரம்மோற்சவம் விழா நடைபெறவுள்ளது.

மார்ச் 22- ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 07.00 மணிக்கு நடைபெறும் 108 கலச திருமஞ்சனத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம் (அல்லது) https://sspt.org.sg/Services/MassEvent எனும் இணையப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம்.

பிரம்மோற்சவத்தையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளி தேர் ஊர்வலம் வரும் மார்ச் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். மார்ச் 19- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் கோயில், மாலை 06.30 மணிக்கு ஸ்ரீ சிவ துர்கா ஆலயம், இரவு 07.00 மணிக்கு புளோக் 93- வம்போ டிரைவ், இரவு 08.00 மணிக்கு புளோக் 122- மெக்னேயர் சாலை, இரவு 08.50 மணிக்கு புளோக் 103- டவனர் சாலை, இரவு 09.40 மணிக்கு புளோக் 2 – செயின்ட் ஜார்ஜஸ் சாலை ஆகிய இடஙக்ளில் வெள்ளி தேர் நிறுத்தி வைக்கப்படும்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகள்…அதிரடியாக காட்டிய அதிகாரிகள்….3.32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தையோ (அல்லது) என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ தொடர்புக் கொள்ளலாம்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.