ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) எந்தெந்த நேரங்களில் என்னென்ன பூஜைகள் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலிருந்து தரையில் விழுந்து சிதறிய பீர் பாட்டில்கள்! – யாரு பாத்த வேலை இது?; சிசிடிவியில் சிக்கிய நபர்!

அதன்படி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 05.00 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையும் திறந்திருக்கும். சனிக்கிழமை மட்டும் காலை 05.00 மணி முதல் காலை 11.30 மணி வரையும், மாலை 05.30 மணி வரையும் இரவு 09.00 மணி வரை திறந்திருக்கும். சிறப்பு நிகழ்வு நாட்களில் கோயில் மூடும் நேரம் மாற்றங்களுக்கு உட்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 05.00 மணிக்கு கோயில் திறந்திருக்கும். அதன் பின்னர், காலை 05.30 மணிக்கு விஸ்வரூபம்/திருப்பள்ளி எழுச்சி பூஜையும், காலை 08.00 மணிக்கு நித்திய பூஜையும், மாலை 06.00 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 08.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும்.

ஸ்ரீ சிவன் கோயிலில் மார்கழி மாத பூஜை நேரங்கள் அறிவிப்பு!

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். வாரத்தில் மற்ற நாட்களில் காலை 11.00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். சனிக்கிழமை மட்டும் மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 09.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பூஜை நேரங்கள் டிசம்பர் 16- ஆம் தேதி முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை நடைபெறும் நேரங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.