“ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஜேஷ்டாபிஷேகம் பூஜை நடைபெறும் என அறிவிப்பு!”

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ ராமர் சந்திப்பு!
Photo: Hindu Endowments Board

 

 

சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சாலையில் (Serangoon Road) அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில், ஜேஷ்டாபிஷேகம் பூஜை (Jeshtabishegam Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

தேசிய தினத்தை முன்னிட்டு Singapore Pools நடந்தும் மெகா ஜாக்பாட் குலுக்கல்

அதன்படி, ஜூலை 26- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மஹா சாந்தி ஹோமமும், ஜூலை 27- ஆம் தேதி காலை 07.00 மணிக்கு மஹா சாந்தி ஹோமமும், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் திருமஞ்சனமும், மாலை 06.30 மணிக்கு 108 கலச ஸ்தாபனமும், ஹோமமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது ‘PSLV-C56′ ராக்கெட்’- இஸ்ரோ அறிவிப்பு!

ஜூலை 28- ஆம் தேதி காலை 06.45 மணிக்கு ஹோமங்களும், 108 கலச திருமஞ்சனமும், மாலை 06.30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஹோமமும், ஜூலை 29- ஆம் தேதி அன்று காலை 06.45 மணிக்கு பஞ்ச சூக்த ஹோமமும், நவகலச திருமஞ்சனமும், மாலை 06.30 மணிக்கு தொட்டில் திருமஞ்சனமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.