வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு உதவிகளை வழங்கிய ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்!

(Photo: Sri Thendayuthapani Temple)

சீனப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் Jalan Kukoh பகுதியில் உள்ள 200 முதியவர்கள் மற்றும் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது.

அதனுடன் சேர்த்து S$50 ரொக்கம் அன்பளிப்பும், ஆரஞ்சுப் பழங்களும் வழங்கப்பட்டதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடை அளிக்கலாம் – எப்படி?

(Photo: Sri Thendayuthapani Temple)

சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி ஆகிய கொண்டாட்டங்களில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து இந்த நடவடிக்கைகள் வழக்கமாக நடந்து வருகிறது.

கொரோனாக்கு முன்பு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் உணவு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கண்கவர் மலர், செடிகொடியுடன் புதிய பூங்கா!