ஜூன் 9- ஆம் தேதி அன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!

Photo: Sri Thendayuthapani Temple

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). இக்கோயில் 15 தேங் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பங்குனி உத்தரம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் சினம் கொண்டு சிறிய கடை உரிமையாளர்கள் – வாடிக்கையாளர் மீது கோப்பையை வீசி கடுமையாக நடந்து கொண்ட உரிமையாளர்

இந்த நிலையில், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் மாதம் 9- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, வரும் ஜூன் 3- ஆம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் நான்கு கால யாக பூஜைகள் தொடங்குகிறது. பாலஸ்தாபன கும்பாபிஷேக தீபாராதனையைத் தொடர்ந்து பகல் 12.00 மணியளவில் பிரசாதம் வழங்கப்படும்.

வேண்டும் வரம் தந்திடும் வெற்றிவேலன் ஸ்ரீ தெண்டாயுபாணி கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழாவின் முன்னோடி வைபவமான பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தின் எல்லா நிகழ்வுகளிலும் பக்தர்கள் திரளாகக் கலந்துக் கொண்டு ஸ்ரீ தெண்டாயுதபாணியின் திருவருளை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“கொளுத்தும் வெயிலுக்கு இவ்ளோ இருந்தா போதும்” – சிங்கப்பூரின் சிகையலங்கார நிலையங்களில் “பாப் கட்டிங் ” செய்யும் பெண்கள்

இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு https://sttemple.com/ என்ற கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.