‘வைகுண்ட ஏகாதசி விழா 2023’- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

'வைகுண்ட ஏகாதசி விழா 2023'- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், வரும் டிசம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 24- ஆம் தேதி வரை ‘ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா 2023’ கோலாகலமாக நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ‘பரமபத வாசல்’ எனப்படும் ‘சொர்க்கவாசல் திறப்பு’ வரும் டிசம்பர் 24- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியையொட்டி, இசைக் கச்சேரி, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்து அறக்கட்டளை வாரியமும், கோயில் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர். நிகழ்ச்சி நிரல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

'வைகுண்ட ஏகாதசி விழா 2023'- ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
Photo: HEB

கோயில் வளாகத்தில் உள்ள பிஜிபி அரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 23- ஆம் தேதி மாலை 06.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை கலைமாமணி டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கும் ‘பெருமாள் பெருமை- பக்திப் பாடல்’ நிகழ்ச்சியும், இரவு 10.15 மணி முதல் 11.30 மணி வரை கோயிலில் ராஜலட்சுமி ராகவன், அருளரசி அசோக்மணி ஆகியோரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், நள்ளிரவு 11.40 மணி முதல் 12.40 மணி வரை முகுந்த தாசன் பங்கேற்கும் ‘ஸ்ரீ ராமானுஜரின் சமூக சேவைகள்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியும், டிசம்பர் 24- ஆம் தேதி அதிகாலை 12.50 மணி முதல் 01.50 மணி வரை கோவிலில் ஸ்ரீப்ரியா விஜய் மற்றும் குழுவினர் பங்கேற்கும் ‘வேங்கடவன் வைபவம்’ என்ற இசைக் கச்சேரியும் நடைபெறவுள்ளது.

புக்கிட் மேராவில் இறந்து கிடந்த ஆடவர் – போலீஸ் விசாரணை

டிசம்பர் 24- ஆம் தேதி அதிகாலை 02.00 மணி முதல் 02.50 மணி வரை கோவிலில் பிரவீணா ஆனந்த் பங்கேற்கும் ‘ஏகாதசியும், வைகுண்ட வாசனும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவும், அதிகாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை கோவிலில் கலைமாமணி டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் மற்றும் குழுவினர் பங்கேற்கும் ‘பெருமாள் பாடல்கள்’ என்ற பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு இந்து அறக்கட்டளை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.